47 ஆண்டுகளின் பின்னர் மீள ஆரம்பமான திருச்சி - யாழ்ப்பாணம் விமான சேவை

by Staff Writer 30-03-2025 | 6:37 PM

Colombo (News 1st) இந்தியாவின் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை 47 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(30) மீண்டும் ஆரம்பமானது.

திருச்சியில் இருந்து பிற்பகல் 01.25 க்கு  புறப்பட்ட விமானம் பிற்பகல் 2.02 அளவில் பலாலியில் உள்ள யாழ்.சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

27 பயணிகளுடன் வருகைதந்த விமானத்திற்கு இதன்போது வரவேற்பளிக்கப்பட்டது.

யாழ்.இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

பின்னர் யாழ்.விமான நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி பிற்பகல் 3 மணியளவில் 36 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.