.webp)
Colombo (News 1st) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை கொழும்பு பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ,முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லீம் மக்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.