.webp)
Colombo (News 1st) பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய குற்றச்சாட்டில் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் ஆஜராகுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க சந்தேகநபர்கள் உதவியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் மாத்தறை நீதிமன்றில் முன்னிலையான தேஷபந்து தென்னகோன் எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.