.webp)
Colombo (News1st) கிராண்ட்பாஸ் நாகலகம வீதி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் சந்தேகநபரின் மனைவி கைது
கிராண்ட்பாஸ் நாகலகம வீதி பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டமை தொடர்பில் மேலும்மொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டி கொட்டுவில பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியொருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இதற்கு முன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மனைவியே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருந்தனர்.