19 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் கைது

19 கிலோகிராமுக்கும் அதிக ஹசீஸ் போதைப்பொருளுடன் கொழும்பு 12 இல் ஒருவர் கைது

by Staff Writer 20-03-2025 | 7:05 PM

Colombo (News1st)19 கிலோகிராமுக்கும் அதிக ஹசீஸ் போதைப்பொருளுடன் கொழும்பு 12 இல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து வீடொன்றில் மேற்கொண்ட  தேடுதல் நடவடிக்கையின் போதே கொழும்பு 12ஐ சேர்ந்த 31 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின்  வீட்டிலிருந்து 348g ஹெரோயின் மற்றும் 4g ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.

இந்த போதைப்பொருளின் பெறுமதி 153 மில்லியன் ரூபாவை விட அதிகம் என கடற்படை தெரிவித்தது.

இதேவேளை, மாத்தறை - திக்வெல்ல உருகுமுவ பகுதியில் 33kg ஹெரோயின் போதைப்பொருளுடன் 42 வயதான ஒருவர் கைதாகியுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்