.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டமை தொடர்பில் பாடசாலை சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு 2 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கலடி சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளால் பாடசாலை சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பாடசாலை சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு 2 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 20,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் 54 பாடசாலை மாணவர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று(11) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.