.webp)
-552094.jpg)
Colombo (News 1st) கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடைக்கிடையே மழை பெய்யுமென திணைக்களம் கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதனிடையே, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மினிப்பே, உடுதும்பர, தொலுவ மற்றும் மெததும்பர பிரதேச செயலக பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, மதுரட்ட, நில்தண்டஹின்ன மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலக பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
