வளம் பெருகும் REBUILDING SRI LANKA

REBUILDING SRI LANKA நிதியத்திற்கு 4263 மில்லியன் ரூபா நிதி

by Staff Writer 19-12-2025 | 7:21 PM

Colombo (News 1st) REBUILDING SRI LANKA நிதியத்திற்கு இதுவரை 4263 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.

ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு நாணயங்களில் மாத்திரம் 6 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி இந்த நிதியத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டிலுள்ள இலங்கையர்கள், வர்த்தகர்கள், வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்கள், இராஜதந்திரிகள் ஆகிய தரப்பினரிடம் இருந்து REBUILDING SRI LANKA வேலைத்திட்டத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்புகிடைப்பதை இது வௌிப்  படுத்துவதாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.