.webp)
Colombo (News 1st) அமெரிக்க RM Parks மற்றும் Tristar ஆகிய நிறுவனங்கள் இணைந்து நேற்று(26) இலங்கையில் தமது பெட்ரோலிய வணிகத்தை ஆரம்பித்தன.
அம்பத்தலே பகுதியில் எரிபொருள் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
RM Parks என்பது Shell நற்பெயரின் கீழ் உலகளாவிய ரீதியில் பெட்ரோலிய பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பிரபலமான நிறுவனமாகும்.
6 தசாப்தங்களின் பின்னரே இலங்கையின் பெட்ரோலிய வணிகத்தில் Shell நிறுவனம் இணைந்துள்ளது.
கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட RM Parks நிறுவனம் இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.