.webp)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 500 உள்நாட்டு திரவப்பால் விற்பனை நிலையங்களை நிறுவுவதற்கு மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
500 தொழில்முனைவோரின் பங்கேற்புடன் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என மில்கோ நிறுவனத்தின் தலைவர் G.V.H.கோட்டாபய தெரிவித்துள்ளார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை மேம்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.