.webp)
Colombo (News 1st) பாண் இறாத்தலின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்கவும் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று(18) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.