![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த விஜேசூரியவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் சாதாரண கடமைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
50 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 53 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சாதாரண கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.