Colombo (News 1st) கொழும்பு ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹரா இன்றிரவு நடைபெறவுள்ளது.
நாட்டின் முக்கிய பௌத்த நிகழ்வுகளில் ஒன்றாக கங்காராம விகாரையின் பெரஹரா அமைந்துள்ளதுடன் இது 46ஆவது வருடமாக நடைபெறுகின்றது.
கங்காராம விஹாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை பெரஹரா இன்றிரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹராவை முன்னிட்டு கங்காராம பகுதியைச்சூழ இன்றும்(12) விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு ராமநாயக்க மாவத்தை, ஹூனுப்பிட்டிய லேக் வீதி, தர்மபால மாவத்தை, பார்க் வீதி, யூனியன் பிளேஸின் கொல்வின் ஆர் டி சில்வா மாவத்தை, ஹைட் பார்க் கோர்னர் ஆகிய பகுதிகள் பெரஹெராவின் போது தற்காலிமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.