Colombo (News 1st) சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது.
அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த மையம் நிறுவப்படவுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 40 அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் செயற்பாடு முதற்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.