மனுஷவின் சகோதரரின் விளக்கமறியல் நீடிப்பு

மனுஷ நாணாயக்காரவின் சகோதரரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 06-01-2025 | 2:33 PM

Colombo (News 1st) முன்னாள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்காரவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா நீதவான் சிலனி பெரேராவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் திசர நாணாயக்கார என்பவர் பிபிலையில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் இந்த நடவடிக்கைக்கு வேறு எவரேனும் உதவி புரிந்துள்ளார்களா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் திசர நாணாயக்கார நீதிமன்றத்தில் இன்று(06) முன்னிலைப்படுத்தப்படவில்லை.