Colombo (News 1st) 2024 Pinnacle விருது வழங்கும் விழாவில் கம்மெத்த மற்றும் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு பல விருதுகள் கிடைத்தன.
2024 Pinnacle விருது வழங்கும் விழா கொழும்பில் நடைபெற்றது.
எம்.யூ.ஜீ.பீ. நிறுவனம் இந்த விருது வழங்கும் விழாவை மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்தது.
வருடத்தின் சிறந்த தன்னார்வ சேவைக்கான விருது கம்மெத்த வசமானது.
வருடத்தின் சிறந்த செய்திக்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட் பெற்றுக்கொண்டது.
ஜனரஞ்சக அரசியல் நிகழ்ச்சிக்கான விருது சட்டன நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.
வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஒமாயா கோவிலகொடகே விருது வென்றார்.
வருடத்தின் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான இணை விருது நியூஸ்ஃபெஸ்ட்டின் இமேஷ் சதர்லண்ட் வசமானது.
வருடத்தின் சிறந்த சிறுவர் டியாலிட்டி நிகழ்ச்சிக்கான விருதி வொயிஸ் கிட்சுக்கு கிடைத்தது.
ஜனரஞ்சக பாடகர்களுகான விருதுகளை ப்ரனிர்ஷா மற்றும் அஸ்லம் ரொஷான் ஆகியோர் பெற்றனர்.
வருடத்தின் மோட்டார் டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான விருது ஒட்டோ விஷனுக்கு கிடைத்தது.
சிறந்த நடிகராக சஜித்த அந்தனி தெரிவானார்.
அவர் சிரச தொலைக்காட்சியில்ஔிபரப்பகும் ரச ரஹசக் தொலைகாட்சி தொடரில் காண்பித்த திறமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை கிட்ஸ்ஃபெஸ்ட்டின் சதுஷி சவிந்தியா வெற்றிகொண்டார்.