Colombo (News 1st) பொகவந்தலாவை லட்சுமி தோட்டம், மேல்பிரிவு இரண்டாம் இலக்க தேயிலை மலையில் இன்று(20) காலை 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.