Colombo (News 1st) ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை மறுதினம்(01) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.
இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 9ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.