Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.