கராத்தே தெரிவுக்குழு தலைவராக அன்ரோ தினேஷ் தெரிவு

இலங்கை கராத்தே தெரிவுக்குழு தலைவராக அன்ரோ தினேஷ் தேவசகாயம் தெரிவு

by Bella Dalima 30-05-2024 | 6:47 PM

Colombo (News 1st) இலங்கை கராத்தே தெரிவுக்குழுவின் தலைவராக அன்ரோ தினேஷ் தேவசகாயம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

W.M.M. மனோஜ் உனந்தென்ன, W.M.D.C.P. விஜிகோன், C.J.சமரசேகர, அனுர ரத்னதேவ ஆகியோர் இலங்கை கராத்தே தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கராத்தே தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதுகலை நிர்வாக பட்டதாரியான அன்ரோ தினேஷ் தேவசகாயம் , ஜப்பான், அயர்லாந்து ,அமெரிக்காவின் கராத்தே கலையின் உயர் நுட்பங்களைக் கற்று உயர்தர டான் டிப்ளோமா தரத்தையும் தேசிய A தர கராத்தே நடுவர் தரத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.