பாலித்தவின் பூதவுடல் 19 ஆம் திகதி நல்லடக்கம்

காலஞ்சென்ற பாலித்த தெவரப்பெருமவின் பூதவுடல் நாளை மறுதினம் (19) நல்லடக்கம்

by Staff Writer 17-04-2024 | 8:15 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர், காலஞ்சென்ற பாலித்த தெவரப்பெருமவின் பூதவுடல் இன்று (17) இரவு மத்துகமயில் உள்ள அன்னாரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நாளை மறுதினம் (19) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும, மத்துகம - நவத்துடுவ பிரதேசத்திலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் மரணச்செய்தியை அறிந்த பெருந்திரளானவர்கள், நேற்று நாகொடை வைத்தியசாலையில் ஒன்றுகூடினர்.

மத்துகம மேலதிக நீதவான் மற்றும் களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

மின்சாரம் தாக்கியமையால், உடலின் உள் உறுப்புகள் சேதமடைந்தமை உயிரிழப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.