புதிய மாற்றங்களுடன் The Voice Sri Lanka Season 3

by Staff Writer 09-12-2024 | 8:09 PM

Colombo (News 1st) இலங்கையிலுள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் இரசிகர்களுக்கும் சர்வதேச தரத்திலானா புதிய தொலைக்காட்சி அனுபவத்தை வழங்கும் நோக்கில் The Voice Sri Lanka Season 3 தொடர்பில் இன்று(09) அறிவிக்கப்பட்டது.

The Voice Sri Lanka Season 3 மூலம் நாட்டின் இரசிகர்களுக்கும் சரவ்தேச தொலைக்காட்சி அனுபவத்தை வழங்குவதற்கு கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் தயாராக உள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்ற குரல் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் திறமையை The Voice Sri Lanka மூலம் உலகிற்கு வௌிப்படுத்த நாம் தயாராக உள்ளோம்.

மிஹிந்து ஆரியரத்ன, ரயினி சாருக்க, சுப்புன் பெரேரா, ஹிருசி ஜயசேன ஆகியோர் The Voice Sri Lanka நிகழ்ச்சியின் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.

இதுவரை எந்த நாட்டிலும் காணப்படாத தனித்துவமான The Voice Sri Lanka பின்னணி வடிவமைப்பு முற்றிலும் இலங்கை தயாரிப்பு என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.