Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று(26) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று முற்பகல் 9 மணி முதல் நாளை(27) அதிகாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாத்துவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ மற்றும் போம்புவல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதான நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.