கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்

by Staff Writer 09-12-2024 | 6:06 PM

Colombo (News 1st) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி M.A.L.S.மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவால் இன்று(09) காலை கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.