Colombo (News 1st) கம்பஹா தம்மிட்ட வீதியின் கவுடன் கஹ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 39 வயதானவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.