Colombo (News 1st)
தென்கிழக்கு வங்காளவிரிகுடா பிராந்தியத்தில் இன்று(07) முற்பகல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமொன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலைமையானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையுமென கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதியளவில் இலங்கை - இந்திய தமிழ்நாடு கரையோரத்திற்கு அப்பால் தென்மேற்கு வங்காளவிரிகுடா கடற்பிராந்தியத்தை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அண்மிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுனெவும் இடைக்கிடையே பலத்த மழைபெய்யக் கூடுமெனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.