SLPP நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கைது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கைது

by Staff Writer 05-12-2024 | 2:33 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று(05) முற்பகல் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.