Colombo (News 1st) கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று(05) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவிக்கு தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன.
மேலும் லொஹான் ரத்வத்தேயிற்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொஹான் ரத்வத்தேயின் மனைவிக்கு சொந்தமான மிரிஹானை எபுல்தெனிய சாலாவ வீதியிலுள்ள 3 மாடி வீட்டிலிருந்து இலக்கத் தகடுகள் அற்ற சொகுசுக்கார் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.