கொழும்பு செத்தம் வீதி ஹோட்டலொன்றில் தீ

by Chandrasekaram Chandravadani 05-12-2024 | 7:06 PM

Colombo (News 1st) கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.

தீ பரவியதை அடுத்து சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் நோய்வாய்ப்பட்ட சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.