பொதுத் தேர்தலில் 50 வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள்

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள்

by Staff Writer 09-11-2024 | 6:29 PM

Colombo (News 1st) பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார்.

சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் அரச சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.