Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(13) மற்றும் நாளை மறுதினம்(14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
அதற்கமைய, கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனிடையே, அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளையும்(13) மற்றும் நாளை மறுதினமும்(14) மூடப்படவுள்ளன.
இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச வங்கிகள், நிதி நிறுவன ஊழியர்களுக்கு விடுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
வழமையான விடுமுறை காலத்தை குறைக்காமல், சம்பளத்தை இரத்துச் செய்யாமல் விடுமுறையை வழங்குமாறு ஆணைக்குழு கூறியுள்ளது.
வாக்களிப்பதற்காக உரிய முறையில் விடுமுறை வழங்கப்படவில்லை என சில வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.