Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் ஆகியோரைப் பெயரிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைத் தவிசாளராக வாகொட பதிரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை உறுதி செய்தது.
17 தேர்தல் வட்டாரங்களில் 15 இல் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.