Colombo (News 1st) இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைமையை செயற்படுத்துவதற்கான கொள்முதல் செயன்முறை தொடர்பான விசேட கணக்காய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கண்காணிப்பை முன்வைப்பதற்காக குறித்த அறிக்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அவதானிப்புகள் கிடைத்த பின்னர் கணக்காய்வாளரின் பரிந்துரையையும் உள்ளடக்கி அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைமையை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக நீண்ட வரிசைகள் ஏற்பட்டன.
தற்போது காணப்படும் கடவுச்சீட்டு புத்தக பற்றாக்குறைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.