தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

by Staff Writer 08-11-2024 | 3:10 PM

Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துண்டுப்பிரசுர விநியோகம், பதாகைகளை காட்சிப்படுத்துதல், விடுவிப்புக்காக பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 353 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.