Colombo (News 1st) WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு நிதி மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகிய வண்ணமுள்ளதாக கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று(28) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது என்ன ஊழல்?
பணம் கோரி, WhatsApp மூலம் இந்த ஊழல் நடைபெறுகிறது.
இனந்தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாகவே இந்த WhatsApp செய்தி வருகிறது.
பணம் அவசரம் என தெரிவித்து வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகையை குறிப்பிட்டு அதனை வைப்பிலிடுமாறு தெரிவித்து இந்த செய்தி அனுப்பப்படுகிறது.
இது தொடர்பில் இன்றைய தினத்துக்குள் மாத்திரம் 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசரப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதில் சிக்கியவர்களின் அனுபவம்?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் WhatsApp மூலம் நிதி கோரி குருந்தகவல்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.