உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்க தீர்மானம்

உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்க தீர்மானம்

by Staff Writer 02-10-2024 | 7:15 PM

Colombo (News1st)  

அதிகரிக்கப்பட்டுள்ள உர மானியத்தை 2 கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு  விவசாய அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்ததை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைக் காலமும் வழங்கப்பட்ட 15,000 ரூபா உர மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதுடன் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா பொதுத்தேர்தலின் பின்னர் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படும்  என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.எம் விக்ரமசிங்க கூறினார்.

பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கும் விவசாயிகள் உர மானிய தொகையை  சிரமமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.