பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன்(16) நிறைவு

பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன்(16) நிறைவு

by Staff Writer 16-08-2024 | 7:03 AM

Colombo (News 1st) இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(16) நிறைவடைகின்றன.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.