வாழைச்சேனையில் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

by Staff Writer 31-07-2024 | 7:06 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனையில் T- 56 ரக துப்பாக்கிகள் இரண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை நாவலடி சந்தியில் T- 56 ரக துப்பாக்கி , 29 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் வெடிமருந்துகள் அடங்கிய மெகசீனும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் சகோதரர் ஒருவரின் வீட்டை சோதனையிட்டபோது, ​ உரையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ​மற்றுமொரு T- 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டிலிருந்து 30 தோட்டாக்கள், மெகசீன், வாள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.