ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ருமேஷ்

ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் ஆற்றலை வௌிப்படுத்திய இலங்கையர்கள்; தங்கம் வென்ற ருமேஷ் தரங்க

by Bella Dalima 15-06-2024 | 6:51 PM

Colombo (News 1st) கிரிக்கெட் விளையாட்டினால் விரக்தியும் கவலையும் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மெய்வல்லுநர் போட்டிகளின் மூலம்  இன்று நிறைவேறியது. 

இலங்கையின் ருமேஷ் தரங்க, ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் (Asian Throwing Championship) இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். 

அது மாத்திரமன்றி, சுமேத ரணசிங்க மற்றும் தில்ஹானி லேகம் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

இரண்டாவது தடவையாக நடத்தப்படும் ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் தொடருக்கான அனுசரணையை தென் கொரியா வழங்குகிறது. 

ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க 85.5 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தினார். 

இது இலங்கை சாதனையாகவும் போட்டி சாதனையாகவும் பதிவானது. 

எவ்வாறாயினும், 5 சென்டிமீட்டரால் அவர் ஒலிம்பிக் விழாவுக்கான வாய்ப்பை இழந்தார். 

ஒலிம்பிக் விழாவுக்கு தகுதி பெறுவதாயின், 85.50 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். 

இதேவேளை, இந்த போட்டியில் மற்றுமொரு இலங்கை வீரரான சுமேத ரணசிங்க வெண்கலப்பதக்கம் வென்றார்.

போட்டியில் அவர் 77.57 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தினார். 

மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தில்ஹானி லேகம்கே வெண்கலப்பதக்கம் வென்றார்.

போட்டியில் அவர் 57.94 மீட்டர் தூரத்திற்கு திறமையை ​வெளிப்படுத்தினார்.