தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட கல்விசாரா ஊழியர்கள் தீர்மானம்

by Bella Dalima 27-04-2024 | 3:50 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் மே மாதம் 2 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென ஒன்றியத்தின்  இணைத்தலைவர் தம்மிக்க S. பிரியந்த தெரிவித்தார்.

இதனால் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தடைப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார். 

இதன்போது, தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த நடவடிக்கைக்கு மேலும் அழுத்தத்தை வழங்கும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத்தலைவர் தம்மிக்க S. பிரியந்த தெரிவித்தார். 

2016 ஆம் ஆண்டு கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தில் 15% குறைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பளப் பிரச்சினையை நிவர்த்திக்குமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.