ஸ்டைன் கலையகத்தில் ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் 117 ஆவது நிர்வாக சபை அமர்வு

by Bella Dalima 09-05-2024 | 8:14 PM

Colombo (News 1st) Asia-Pacific Broadcasting Union எனப்படும் ஆசிய பசுபிக் பிராந்திய ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் 117 ஆவது நிர்வாக சபை அமர்வு இரத்மலானை ஸ்டைன் கலையத்தில் நடைபெற்றது.

இன்று (09) முற்கபல் ஆரம்பமான இந்த அமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிய பசுபிக் பிராந்திய  ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹமட் நதீமும் இதில் பங்கேற்றார்.

வருகை தந்திருந்த ஊடக நிறுவன பிரதானிகளை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுனில் கனோஜியா வரவேற்றார்.

ஆசிய பசுபிக் பிராந்திய  ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் 117 ஆவது நிர்வாக சபை அமர்வின் தலைமையுரையை தேசிய புலமை சொத்துப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கீதாஞ்சலி ரணவக்க நிகழ்த்தினார்.

இன்றைய நாள் முழுவதும் ஸ்டைன் கலையகத்தில் ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் வட்டமேசை கலந்துரையாடல்களை நடத்தினர்.