காஸா குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Bella Dalima 26-04-2024 | 5:59 PM

Colombo (News 1st) காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் இன்று (26) கையளிக்கப்பட்டன.

கல்முனை ஹூதா ஜூம்மா பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கிண்ணியா கிளை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் மற்றும் விளையாட்டு நிறுவனமொன்று, காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, H.M.M.ஹரீஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சரத் குமார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கையளித்தார்.

எதிர்வரும் நாட்களில் அந்த நன்கொடை பாலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.