உலக பணக்காரர்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விப்ட்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த பாடகி டெய்லர் ஸ்விப்ட்

by Bella Dalima 03-04-2024 | 3:33 PM

Colombo (News 1st) ஃபோர்ப்ஸ் (Forbes) வௌியிட்டுள்ள Billionaires பட்டியலில் அமெரிக்க பொப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (Taylor Swift) இடம்பிடித்துள்ளார். 

உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் நிறுவனம், Eras Tour இசை நிகழ்வில் ஈட்டிய, வரிக்கு பிந்தைய வருமானம் 190 மில்லியன் அமெரிக்க டொலர், பில்லியனியர் பட்டியலில் டெய்லரை இணைத்துள்ளது. 

பாடல் எழுதுதல் மற்றும் இசை நிகழ்வுகள் மூலம் மட்டுமே வருமானம் ஈட்டிய முதல் நபர் இவர் என டெய்லர் ஸ்விப்ட் குறித்து ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

டெய்லரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

அவருடன் பாடகி ரிஹானா, ஓப்ரா வின்பிரே மற்றும் Star Wars இயக்குநர் ஜோர்ஜ் லுகாஸ் (George Lucas) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பில்லியனியர் வரிசையில் ஜோர்ஜ் லுகாஸ் 5.5 பில்லியன் டொலர் சொத்து மதிப்போடு முதலிடத்தில் உள்ளார்.

டெய்லரின் 11 ஆவது அல்பம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. மே மாதம் முதல் தனது Eras Tour பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளார் டெய்லர்.

ஏனைய செய்திகள்