மகாவலி விளைநிலங்களுக்கு 20 முதல் நீர் விநியோகம்

மகாவலி விளைநிலங்களுக்கு மார்ச் 20 முதல் நீர் விநியோகம்

by Staff Writer 03-03-2024 | 4:55 PM

Colombo (News 1st) சிறுபோகத்திற்காக மகாவலி வலயத்திற்கு நீரை விடுவிக்கும் நடவடிக்கை மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

மார்ச் முதல் ஜூலை வரை நீர் விநியோகிக்கப்படும் என மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே, சிறுபோகத்திற்கு போதுமான அளவு நீர் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 258 வாவிகள் காணப்படுகின்றன.

அந்த வாவிகளில் 90 வீதத்திற்கும் அதிகமான கொள்ளளவு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.