காலி சிறையில் மற்றுமொரு கைதிக்கு மூளைக்காய்ச்சல்

காலி சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிக்கு மூளைக்காய்ச்சல்

by Staff Writer 03-03-2024 | 2:19 PM

Colombo (News 1st) மூளைக்காய்ச்சல் எனப்படும் Meningitis நோய்த் தாக்கத்திற்குள்ளான மற்றுமொரு கைதி காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

காய்ச்சல் நிலைமை காரணமாக இதற்கு முன்னரும் காலி சிறைச்சாலை கைதியொருவரும் மாத்தறை சிறைச்சாலை கைதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர மேலும் சில நோயாளர்களும் பதிவாகியிருந்தனர்.