.webp)
Colombo (News 1st) கந்தானை பொது வர்த்தக சந்தை கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(03) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட சமீர மனஹரவுடன் இருந்த உபாலி குலவர்தன என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் சமீர மனஹர உள்ளிட்ட இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.