.webp)
-517691.jpg)
Colombo (News 1st) மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளம்பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
