இந்தியா சென்றிருந்த அனுர குமார நாடு திரும்பினார்

by Bella Dalima 10-02-2024 | 5:34 PM

Colombo (News 1st) இந்தியாவில் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) பிற்பகல் நாடு திரும்பினர்.

இந்த விஜயத்தின் போது, அனுர குமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்தார்.

இந்தியாவின் பிரபல வர்த்தகர்களுடனும் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடினர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,  பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், டொக்டர்  நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்தியா சென்றிருந்தனர். 

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவர் இந்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பை பெற்றிருந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.