இரட்டை சதமடித்து பெத்தும் நிஸங்க சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து பெத்தும் நிஸங்க சாதனை

by Bella Dalima 09-02-2024 | 9:00 PM

Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸங்க சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்களுடன் 210 ஓட்டங்களைக் குவித்தார். 

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்ற 188 ஓட்டங்களே இலங்கை சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

24 வருடங்களுக்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்றிருந்த சாதனையை பெத்தும் நிஸங்க இன்று முறியத்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி இலக்கு  382 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய செய்திகள்