.webp)
China: சீனாவின் வடமேற்கு யின்சுவான் (Yinchua) நகரில் Barbecue உணவகத்தில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு டிராகன் படகுத் திருவிழா ஜூன் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறும் நிலையில், இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
விடுமுறை காரணமாக யின்சுவானில் உள்ள பிரபல Barbecue உணவகத்தில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
அந்த சமயத்தில் உணவகத்தின் திரவ பெட்ரோலிய வாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பில் உணவகம் முழுவதும் வேகமாக தீ பரவியுள்ளது.
தகவல் அறிந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள், இன்று காலை மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.